news

தூய்மை காவலர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுப்பு – ஊரக வளர்ச்சித்துறை புதிய உத்தரவு

  • 22-08-2025
  • 12:45:21 PM

தமிழக கிராமப்புறங்களில் பணியாற்றும் தூய்மை காவலர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுப்பு வழங்கப்பட உள்ளது. ஊரக வளர்ச்சித் துறை வெளியிட்டுள்ள புதிய உத்தரவால் ஆயிரக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். சமீபத்தில், தமிழ்நாடு கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், தூய்மைக் காவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் சங்கம், தங்கள் முக்கிய கோரிக்கைகளை அரசுக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தது. அந்தக் கடிதத்தில், கிராமங்களில் வீடு தோறும் குப்பைகள் சேகரிக்கும் பணியில் ஈடுபடும் தூய்மை காவலர்களுக்கு வாரத்தில் குறைந்தபட்சம் ஒரு நாள் ஓய்வு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. “சுழற்சி முறையில் வாரம் ஒரு நாள் தூய்மை காவலர்களுக்கு கட்டாய விடுப்பு வழங்கப்படும்” என்று உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பு, தினமும் கடின உழைப்பில் ஈடுபடும் தூய்மை காவலர்களின் உடல் நலம் மற்றும் சமூக நலனுக்குப் பெரும் ஆதரவாக அமையும் என கூறப்படுகிறது.தூய்மை காவலர்களுக்கு வாரம் ஒரு நாள் சுழற்சி முறையில் விடுப்பு. சங்கத்தின் கோரிக்கைக்குப் பதிலளித்து ஊரக வளர்ச்சித் துறை உத்தரவு. ஆயிரக்கணக்கான கிராமப்புற தூய்மைப் பணியாளர்களுக்கு நிம்மதி.

  • தமிழ்நாடு

Comments

    ..

Write Your Comments

Recent News