news

திருப்பரங்குன்றம் ஐகோர்ட் கிளை தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும்- அமைச்சர் ரகுபதி

  • 06-01-2026
  • 11:28:28 PM

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவு குறித்து கூறியதாவது:- * திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஐகோர்ட் கிளை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும். உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். தீபத்தூணில் தீபம் ஏற்றியதற்கான சான்று கடந்த 100 ஆண்டு காலமாக இல்லை. திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றும் வழக்கம் தமிழ்நாட்டில் கிடையாது. யாரோ ஒருவர் கேட்டதற்காக தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டிருக்கிறார்கள். இல்லாத ஒரு வழக்கத்தை நீதிமன்றம் ஏன் புகுத்த வேண்டும்? பிரச்சனைக்குரிய அந்த தூண் தீபத்தூண் கிடையாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்றார்.

  • தமிழ்நாடு

Comments

    ..

Write Your Comments

Recent News