*ஜப்பானில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி அச்சம்* டோக்கியோ, ஜப்பான் ஷிமானே மாகாணத்தில் இன்று (ஜன.6) அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகி உள்ளது. ஜப்பானை உலுக்கிய 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளது என்ற அச்சத்தை மக்களிடம் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஷிமானே மாகாணத்தில் வசிப்பவர்கள் கடுமையான நிலநடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
..