சூலூர் செய்தி. சூலூரில் பிரபல மருத்துவர் திடீர் மாயம் மனைவி காவல் நிலையத்தில் புகார். சூலூர் ,ஜன. 7; கோவை மாவட்டம் சூலூர் சிறுவாணி டேங்க் பகுதியில் வசித்து வருபவர் டாக்டர் பிரேம்குமார்(66) இவருக்கு திருமணம் ஆகி வசந்தி(58) என்ற மனைவியும் ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். மகன் மற்றும் மகள் இருவரும் டாக்டராக பணியாற்றி வருகின்றனர். சூலூர் பகுதியில் மிகவும் பிரபலமாகவும் பொதுமக்கள் இடத்தில் நற்பெயர் பெற்றவர் டாக்டர் பிரேம் குமார். இவர் தனது வீட்டிலேயே கிளினிக் வைத்து நடத்தி வருகிறார் .பொதுமக்களுக்கு மிகவும் குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பார்ப்பதால் சூலூரில் மிகவும் பிரபலமான இவரிடம் ஏராளமான வாடிக்கையாளர்கள் மருத்துவம் பார்க்க வருவது வழக்கம். இவர் கடந்த டிசம்பர் 16ஆம் தேதி அன்று தனது கிளினிக்கில் வைத்தியம் பார்த்துக்கொண்டு இருந்துள்ளார். இவரது மனைவி வசந்தா வீட்டிற்குள் சமையல் செய்து கொண்டு இருந்துள்ளார். சுமார் 2 மணி அளவில் சாப்பிடுவதற்கு தனது கணவர் வரவில்லை என்பதால் கிளினிக்கிற்கு வந்து பார்த்துள்ளார். அப்போது அங்கு தனது கணவர் பிரேம்குமார் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பிரேம்குமார் அடிக்கடி தனது மகள் மருத்துவராக இருக்கும் சென்னை மற்றும் உறவினர்கள் வீட்டிற்கு சென்று விட்டு வருவது வழக்கம். தற்போதும் அவ்வாறு சென்றிருப்பார் என வசந்தி இருந்துள்ளார். கணவரிடமிருந்து போன் மூலம் எந்தத் தொடர்பும் இல்லாததால் இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் விசாரித்த போது மருத்துவர் எங்கும் வரவில்லை என தெரிய வந்துள்ளது .அதைத் தொடர்ந்து நேற்று தனது கணவர் டாக்டர் பிரேம்குமாரை காணவில்லை என சூலூர் காவல் நிலையத்தில் வசந்தி புகார் அளித்தார் .புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மருத்துவர் பிரேம்குமார் எங்கு சென்றார் ,அவருக்கு என்ன ஆனது, தற்போது எங்கு உள்ளார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் .மிகவும் பிரபலமான மருத்துவர் திடீரென காணாமல் போன சம்பவம் பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Sir, நீங்கள் நலமுடன் குடும்பத்துடன் சேர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்
08-01-2026 06:32:06 PM
Sir, நீங்கள் நலமுடன் குடும்பத்துடன் சேர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்
08-01-2026 06:31:05 PM
அவர் நலமுடன் திரும்பி குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ இறைவனை வேண்டுகிறேன்
08-01-2026 11:55:03 AM
நல்லபடியாக திரும்பி வர வேண்டும்
08-01-2026 09:51:00 AM