news

தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம்

  • 03-07-2024
  • 04:21:08 PM

3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுரை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் 200-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கண்டன பேரணி நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து தல்லாகுளம் தபால் நிலையம் வரை வழக்கறிஞர்கள் கண்டன பேரணியில் ஈடுபட்டனர். நாகையில் வழக்கறிஞர்கள் கருப்புச் சட்டை அணிந்து 3-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • தமிழ்நாடு

Comments

    ..

Write Your Comments

Recent News