news

தமிழகத்தில் ராணுவ தளவாடம்: ஜனாதிபதி உரையின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?

  • 27-06-2024
  • 12:41:30 PM

புதுடில்லி: பார்லி., கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுகையில், ''உத்தரபிரதேசம், தமிழகத்தில் ராணுவ வழித்தடம் அமைக்கப்பட உள்ளதாக'' அறிவித்தார். * ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: * பிரதமரின் கிராமப்புற சாலை வசதி திட்டம் கிராமப்புற உள்கட்டமைப்புகளுக்கு ஊக்கம் அளித்துள்ளது. * பின் தங்கிய பழங்குடியின மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த, பிரதமரின் ஜன் மன் திட்டத்தின் மூலம் ரூ.24,000 கோடி செலவழிக்கப்பட்டு வருகிறது. * 80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கப்படுகிறது. புல்லட் ரயில் * மின்சாரத்தை விற்பனை செய்து வருவாய் பெருக்க, சூரிய ஒளி மின்சக்தி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. * சோலார் பேனல் திட்டம், மின்சார கட்டணத்தை குறைக்கும். * உலகத்திலேயே மிகப்பெரிய உள்நாட்டு விமான சேவை கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. * மும்பையில் அமைக்கப்படுவதை போல நாட்டின் மற்ற பகுதிகளிலும் புல்லட் ரயில் திட்டம் கொண்டுவர முயற்சி எடுக்கப்படும். ராணுவ வழித்தடம் * உத்தரபிரதேசம், தமிழகத்தில் ராணுவ வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. * பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி முன்பை காட்டிலும் 18 மடங்கு அதிகரித்துள்ளது. * 2036ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியா நடத்த தயார். இதற்கான முயற்சி எடுக்கப்படும். வினாத்தாள் கசிவு * போட்டி தேர்வுகளில் வினாத்தாள் கசிவதை தடுக்க, கடும் தண்டனை விதிக்கும் வகையில், புதிய சட்டத்தை அரசு இயற்றியுள்ளது. * வினாத்தாள் கசிவுகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். * வினாத்தாள் கசிவு பிரச்னைகளை களைய கட்சி, அரசியலை தாண்டி நாம் ஒன்றிணைய வேண்டும். * வடகிழக்கு மாநிலங்களில் அமைதியை நிலைநாட்ட பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. * 50 ஆண்டுகளுக்கு முன்பு ஜூன் 25ல் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டதன் மூலம் அரசியல் சாசனத்தின் மீது நேரடியாக தாக்குதல் நடத்தப்பட்டது. * வளர்ந்த இந்தியாவை கட்டியெழுப்புவது ஒவ்வொரு குடிமகனின் லட்சியமும் உறுதியும் என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

  • இந்தியா

Comments

    ..

Write Your Comments

Recent News