news

சென்னை வருகை மத்திய குழு

  • 06-12-2024
  • 10:59:25 AM

வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு இன்று மாலை சென்னை வருகிறது. வங்கக்கடலில் கடந்த மாதம் 23-ந்தேதி உருவான பெஞ்சல் புயல், 1-ந்தேதி மாமல்லபுரத்துக்கும் புதுச்சேரிக்கும் இடையே கரையை கடந்தது. அப்போது பலத்த சூறாவளி காற்காற்றுடன் பேய் மழை கொட்டித்தீர்த்தது. அதனால் தமிழகத்தின் கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. தவிர சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வடமாவட்டங்களிலும் கனமழை பெய்தது. இந்த மழை காரணமாக 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த பேரிடர் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். அதில் வெள்ளப் பாதிப்புகளை சீரமைக்க உடனடி நிவாரணமாக தமிழக அரசுக்கு ரூ.2 ஆயிரம் கோடி நிதி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த நிலையில், வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய உள்ள மத்திய குழுவினர் இன்று சென்னை வருகிறார்கள்.

  • தமிழ்நாடு

Comments

    ..

Write Your Comments

Recent News