சிறந்த பாடல் மற்றும் சிறந்த இசை ஆகிய பிரிவுகளில், மேற்கு வங்கத்தை சேர்ந்த இசையமைப்பாளர்கள் உட்பட ஐந்து பேர், 2025ம் ஆண்டு ஆஸ்கர் விருது போட்டியில் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் வெளியான சிறப்பான படங்களுக்கு வழங்கப்படும் ஆஸ்கர் விருதுகள் மிகவும் பிரபலம். திரையுலகில் இருக்கும் அனைவருக்குமே இந்த விருதை பெறுவது தான் கனவாக இருக்கும். இந்தியாவில் இந்த விருதை, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ரசூல் பூக்குட்டி, பாடலாசிரியர் குல்ஸார் உள்ளிட்டோர் பெற்றுள்ளனர். சிறந்த பாடலுக்காக ஆஸ்கர் விருதுக்கு போட்டியிடும் 89 பாடல்களில் 'பேண்ட் ஆப் மஹாராஜாஸ்' படத்தின் இரண்டு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இந்தப் பாடல்களை பாடிய மற்றும் இசையமைத்த மேற்கு வங்கத்தை சேர்ந்த சயான் கங்குலி, இமான் சக்ரவர்த்தி, பண்டிட் பிக்ரம் கோஷ், ஷமீக் குண்டு மற்றும் தாலியா மைதி பா ஆகிய ஐந்து பேர் போட்டியில் உள்ளனர்.
..