news

சென்னையில் கிராமத்து திருவிழா – பாரம்பரியத்தில் நெகிழ்ந்த நடிகர் கார்த்தி.

  • 23-08-2025
  • 11:33:12 AM

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் “சென்னையில் ஒரு கிராமத்து திருவிழா” என்ற தலைப்பில் பாரம்பரியத்தை மையமாகக் கொண்ட சிறப்பு விழா நடைபெற்று வருகிறது. செம்பொழில் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழா, நகரத்தில் வாழும் மக்களுக்கு கிராமத்து வாழ்க்கை, கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றை நேரில் அனுபவிக்க வாய்ப்பு அளிக்கிறது. இந்த கிராமத்து திருவிழா ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்கி வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தினமும் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை மக்களுக்கு திறந்திருக்கிறது. பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் சிறுதானிய உணவுகள் விவசாயம் சார்ந்த புத்தகங்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் மாட்டு வண்டி, குதிரை வண்டி சவாரி பானை அடித்தல், இளவட்டக்கல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் 120-க்கும் மேற்பட்ட ஸ்டால்கள், கிராம வாழ்க்கையை கண் முன் கொண்டு வரும் விதமாக அமைக்கப்பட்டுள்ளனஆகஸ்ட் 21, 22 – ரூ.50 ஆகஸ்ட் 23, 24 – ரூ.150 பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விழாவை தொடங்கி வைத்தார். அவர் கூறியதாவது: “நகரத்தில் இயந்திரத்தனமாக வாழும் நாம், விடுமுறையில் கிராமங்களுக்கு சென்று சுவாசிக்கிறோம். பழைய வாழ்க்கை முறைகளை மறந்து கொண்டிருக்கும் இன்றைய தலைமுறைக்கு நினைவூட்டும் விதமாக இந்த திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றா திருவிழாவை நேரில் கண்டு மகிழ்ந்த நடிகர் கார்த்தி, தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்: “இது இரண்டாவது வருடம். கடந்த ஆண்டு குழந்தைகள், குடும்பங்கள் என நிறைய பேர் வந்து மகிழ்ந்தார்கள். ஒவ்வொரு ஸ்டாலும் கிராமத்து பொருட்களால் அமைக்கப்பட்டிருக்கும். சிறுதானியங்களைப் பயன்படுத்திய உணவுகள், உடனடியாக சமைத்து தரப்படும் பாரம்பரிய உணவுகள்—all available here. ‘இங்க அவ்ளோ சந்தோஷம் இருக்கு’ என்று மனம் நெகிழச் சொல்கிறேன்” என தெரிவித்தார்.

  • சினிமா

Comments

    ..

Write Your Comments

Recent News